Monday, June 30, 2008

பாரீசுக்குப் போடா மவனே...!

பாரீசுக்குப் போ !

என் எதிர்கால பேட்டியிலிருந்து.....

வருங்காலத்தில் ஆனந்த விகடனில் வரப்போகும் என் பேட்டியிலிருந்து எடுக்கப்பட்டவை ... இதோ .. இப்போதே ..

சினிமாவுக்காக எதை எதையோ இழந்து ஜெயித்த என் மரியாதைக்குரிய சினிமா சிற்பிகளுக்கு முன்னே கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் என்னால் சொல்ல முடியும்... சினிமாவுக்காக நான் எதையும் இழக்க வில்லை... சரியான நேரத்தில் சரியான் வாழ்க்கை நிகழ்வுகள் ... தவறான நேரத்தில் மிக தவறான நிகழ்வுகள்.. நிதர்சன வாழ்க்கையின், வலிகள், வேதனைகள், சந்தோஷ துக்கங்கள் எல்லாமே நடந்து கொண்டுதான் இருந்தன.. பார்த்து கொண்டுதான் இருதேன்.. கண்டிப்பாக நான் "ஒரு ஜெயன் பாலாஜி பிலிம்" என்று பறை சாற்றுவேன் என்ற நம்பிக்கையின் நினைப்பிலேயே...

வளர்ந்து வரும் என் மகளுக்கு ஒரு கதை சொல்லி தூங்க வைக்க முடியாமல் என்னால் ஊருக்கு கதை சொல்ல விருப்பம் இல்லை.. நான் எதையும் இங்கே மிஸ் செய்ய வில்லை.. குறிப்பாக சினிமாவுக்காக எதையும் இழக்க வில்லை.. சற்றும் குறையாமல் நானே வியந்த எனக்குள் கனன்று கொண்டிருந்த சினிமா உணர்வின் தீ அணைந்து விடாமல் கொழுந்து விட்டு கனன்று எரிய நான் எடுத்து கொண்ட சிறு சிறு விட முயற்சிகளை தவிர..

ரைட்டேர்ஸ் ப்ளாக் என்று சொல்வார்கள்.. அதன் வேதனை மட்டும் எனக்கு ஒரு நடுத்தர வர்கத்து குடும்பஸ்தனாக நன்றாகவே வலித்தது தெரியும்...

இதை விட சிறப்பாக என்னால் சினிமா எடுக்க முடியும் என்ற ஆதங்கம் மட்டும் சினிமா தொழிலில் ஈடுபட வைக்கும் என்றால் அதன் மேல் எனக்கு உடன்பாடு இல்லை.. நான் பார்த்து வியந்த.. என்னை ஆச்சர்ய பட வைத்த ஒரு தொழிலுக்கு என்னால் என்ன பங்களிக்க முடியும் என்பது மட்டுமே குறியாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து...

வாழ்க்கை ஒரு முறைதான்.. நீ ஆசைப்பட்டபடி வாழ்த்து பார்த்து விடு....என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி ஆசைப்பட்டபடி வாழ்ந்து பார்க்கும் முன் நம்மை நம்பிய அல்லது நாம் அவர்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள் என்று நாம் நம்பிக் கொண்டு இருக்கிற சில நபர்கள் காயப்படாமல் சேதப் படாமல் நாம் வாழ்ந்து பார்க்கலாமே என்ற சற்றே ஸ்திரமான பொது நலம்தான்..

என்னை அதிகம் பாதித்த விஷயங்கள் பெண்களை சார்ந்தே இருக்கும்..நான் அதிகம் ஏக்கப்பட விஷயம் ஒரு பெண் சார்ந்தே இருந்திருக்கும்... என்னை ரொம்ப யோசிக்க வைத்த விஷயமும் ஒரு ஆண் பெண் சம்பந்தப்பட்ட விஷயமாகவே இருக்கும் என்பது உறுதி ... அந்த உணர்வுகளையே திரையில் துடிக்க துடிக்க சொல்ல வேண்டும் என்பது என் கனவு.. ஆசை...

அடிப்படையில் ஷங்கர் முதல் ஸ்டீவென் சொடர்பர்க் வரை பார்த்து வியந்த வகையில் எனக்குள் குடி கொண்ட ஆக்க்ஷன் வெறியின் விளைவுதான் என்னுடைய "இமாலயன்"... "ரெட்டை, "குருகுலம்," வம்சா வழி" போன்ற ஆக்க்ஷன் படங்கள்...

மென்மையான என்னுடைய் உணர்வுகளை நான் விரும்பிய படி படைத்தது வெற்றி பெற்றவைதான் என்னுடைய "பூக்கள் இன்னும் மலரும்..",  "உடல் பொருள்" etc., etc.,



"எந்தெந்த தருணங்களில் நான் இறந்து போனேன் !!..."என்பதை பற்றி கவிதை எழுதுவதாய் உத்தேசம்....

Saturday, June 28, 2008

முதல் பட்டம் ....


இதுதான் நான் பெற்ற முதல் பட்டம்... என்னை உந்தி உயிர்ப்பித்த ஆவணம்....

Friday, June 27, 2008

குரும்பல்(குறும்பு) நாட்கள்...

எனது பால காண்டம் - பத்தாம் வகுப்பு வரை நான் படித்த .. வளர்ந்த .. வாழ்ந்த எனது கிராமம் ... எனது மண்...

கருப்பர் தேசமும் கருப்பு தங்கமும்...மற்றும் நானும்...

என்னதான் சினிமாவுக்கு நேர்ந்துவிடப்பட்டதாக நினைப்புன்னாலும், படித்த படிப்புக்கும் வாழ்க்கையின் எதார்த்த ஓட்டத்துக்கும் கிடைத்ததுதான் ஆப்பிரிக்க கடற்க்கரை ஓரம் ஆயில் கம்பெனி வேலை... ஒன்றரை மாதம் நாடு கடலில் வேலை.. ஒன்றரை மாதம் லீவு.. வாழ்க்கை எனக்கு காட்டிய வேடிக்கையின் நடுவே நான் கொஞ்சம் நிதர்சன வாழ்க்கையை படித்தேன்...

வெளி நாட்டு வேலை என்று உள் நாட்டில் சொல்லி சென்றாலும்.. நம் நாட்டை விட ஒரு ஏழை நாட்டில் கையேந்தி போகிறோம் என்று யாரிடமும் சொல்லியதில்லை.. சொல்ல முடிந்ததில்லை.. படம் பண்ண முடியாமல் பணம் பண்ணிய நாட்கள் அவை... நிறைய படிக்கவும்.. நிறைய எழுதவும்.. நிறைய வெளிநாட்டு படங்களை காணும் அனுபாவமும் ஏற்படுத்தி தந்த தனிமையான தவம் இருந்த நாட்கள் அவை...

ஆப்பிரிக்காவை பொறுத்த வரை நான் பணியாற்றியது மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த ஈக்வடோரியல் கினியா என்ற சிறு நாட்டினை சேர்ந்த கடற்பகுதி.. நடுக்கடலில் குருடு ஆயில் எடுக்கும் பணியில் ரசாயன பிரிவில் எனக்கு வேலை... கடலுக்குள் செல்லும் முன் செய்யும் சிறு பயணத்தின் பொது கண்ட அந்த நாட்டின் ஏழ்மை... அப்பாவி கறுப்பர்களின் முகங்களில் எனது அப்பா அம்மாவை கண்ட அனுபவம் .. ஏனோ பல வளங்கள் நிறைந்த அந்த நாட்டினை சூழ்ந்திருக்கும் ஏழ்மையும் ,ஏதோ ஒரு அமெரிக்க நிறுவனம் அவர்களை நிர்வாணமாக்கி விட்ட உணர்வு.. அந்த அப்பாவி கறுப்பர்களின் வளங்கள் சுரண்டப்பட்டு அவர்களை அப்படியே விட்டு செல்லும் ஒரு கூட்டத்துக்கு உடன் துணை போகும் ஒரு அருவருப்பு உணர்வு எப்போதும் இருந்ததுண்டு...
நான் சம்பாதித்த டாலர்களில் ஆயிலின் அழுக்கு இருந்ததோ இல்லையோ.. அந்த அப்பாவி கறுப்பர்களின் ரத்தக்கறை இருப்பதாகவே உணர்ந்தேன் ...
நான் உடலை வருத்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் என்பதால்.. 'கொன்றால் பாவம் தின்றால் போச்சு' என்ற சப்பை கட்டும் சமாதானம் கொண்டு நியாய படுத்தி கொண்டேன் என்றால் அது உண்மை தான்....
நான் என் கடமையை செய்தேன் என்பது உண்மை.. என் உணர்வுகளும் உண்மை...

ஒ! அமெரிக்கா போயிருக்கேனே..










என் அமெரிக்க பயணக்கட்டுரை .... யாருக்கும் பயன் இல்லை என்று தெரிந்தாலும்... பெரிதாக மணியன் ஐயா அவர்கள் ஸ்டைலில் எழுத தெரிய விட்டாலும் உள்ளுக்குள் இருக்கும் ஒரு உலகம் சுற்றும் வாலிபன் எழுதுவது...
வேண்டா வெறுப்பாக ஒரு ஏப்ரல் மாதத்தில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எங்கள் ரசாயன ஆலையில் சில நாட்கள் பயிற்சிக்கு பரிந்துரைக்கப்பட்டேன்...
சென்னை மவுண்ட் ரோடு அமெரிக்கன் அலுவலகத்தில் அதே ( நான் பார்த்து கோபப்பட்டு திட்டிய அதே மானங்கெட்ட ) கியூவில் நின்று .. உள்ளே சென்று கியுவிலேயே (உட்கார வைக்காமல் ) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி( நீங்கள் ஏற்கனவே அமெரிக்கா போக வின்னப்பித்திருந்தீர்களா என்று கணினி முன்பு அமர்ந்து அந்த வெளிநாட்டான் கேட்ட கேள்விக்கு இல்லை என்று பதில் சொன்னேன் ... அவ்வளவுதான்.. ) விசா பெற்றுக்கொண்டேன்...( அங்கே கியுவில் நின்ற பல தாத்தா பாட்டிகளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது..அவர்களுக்கும் அநேகமாக அதே கேள்விகள் ...??) . அமெரிக்கா போவதாக நிறைய பார்களில் சத்தமாக நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்த பொது என்னை பல டேபிள் குடிமகன்கள் திரும்பி எதோ கானத்தை கண்ட மாதிரி பார்த்தது எனக்கு அருவருப்பு கலந்த பெருமையை கொடுத்தது...
அமெரிக்காவின் ஜார்ஜ் புஷ்




என் கனவு ஒரு நல்ல இயக்குனர் ஆவது மட்டுமே...






உதவி இயக்குனராக அந்த குருகுல நாட்கள்...


சிறுகதை

ஆனந்த விகடனில் பிரசுரமான என்னுடைய முதல் சிறுகதை.....நேரம் இருந்து பொறுமையும் இருந்தால் படிக்கவும்...நன்றி...