Wednesday, November 10, 2010

வெற்றிடத்தில் வேறு இடம்

இந்த முறை ஊருக்கு சென்ற போது தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்க நாற்பதாவது ஆண்டு விழாவில் பங்கேற்கவும், நேரு உள் விளையாட்டு அரங்கினை பார்க்கவும் பழைய நண்பர்களை சந்திக்கவும் நேர்ந்தது.. கற்றது தமிழ் ராமை சந்தித்தபோது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.. என்னவோ ஒரு தீர்க்கம் அவன் முகத்தில் தெரிந்தது.. பெரிதாக வரப்போகிறான் என்று தோன்றியது.. மின்னலே திரைப்பட வேலைகளின் போது மஜ்னு விவாதத்தில் இருந்த நான் சி டி வி அலுவலகத்தில் சந்தித்த பிறகு அன்றைய விழாவில் கவுதம் மேனோனை சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தேன்.. அவருக்கு என்னை நினைவிருக்க சத்தியமாக வாய்ப்பில்லை.. ஒரு gold flake kings அவர் எனக்கு கடன் பட்டிருக்கிறார் என்ற சந்தோஷம் எனக்கு எப்பவும் உண்டு...



பாஸ் என்கிற பாஸ்கரன் படம் பார்த்தேன்.. சும்மா கலகலப்புக்காக ஓடா விட்டாலும் ரொம்பவே பாசிடிவாக ஒரு செய்தி சொல்லப் பட்டிருப்பதை உணர்ந்தேன்.. படிப்பில் பெயில் ஆகி கொண்டிருந்த மாணவன் ஒரு டுட்டோரியல் ஆரம்பித்து நூறு பேரை பாஸ் செய்ய வைத்தான் என்கிற விஷயம் மக்களை சென்று சேர்ந்திருப்பதை அறிகிறேன்...



எந்திரன் படத்தை ஒரு ஜுராசிக் பார்க் படம் பார்ப்பது போல அதே உணர்வுடன் பார்த்து தீர்த்தேன்..

கடலுக்கு வந்த பிறகு வீடியோவில் தெலுகு படமான வேதம், மகாதீரா மற்றும் மலையாள படமான பாடி கார்ட் ரொம்பவே பிடித்திருந்தது..

விக்கி, கிறிஸ்டினா & பார்சிலோனா மற்றும் கேத் வின்ஸ்லேட்டின் தி ரீடர் படங்கள் ரொம்பவே பாதித்தது...


என்னவோ படம் என்பது பிரமாண்டத்தையும், காமெடியையும் பாடல்களையும், ஆட்டங்களையும், நம்பியே போவதாகவும், நான் விரும்புகிற அந்த ஆன் பெண் உறவுகளையும் உணர்வுகளையும் நம்ம ஊர் படம் இன்னும் சொல்ல வில்லை என்பதையும், அங்கு ஒரு வெற்றிடம் இருப்பதாகவும், நான் கூடிய சீக்கிரம் நிரப்ப போகிறேன் என்றும் உணர்கிறேன்...