Tuesday, January 18, 2011

அண்ணனின் சீர்

பொங்கல் சீரு என்னடா ஆச்சுன்னு அசோக் நகர் அக்கா அமெரிக்க அண்ணனுக்கு தமஸா மெயில் அனுப்ப.. அவனோட பதில்.. அப்புடியே.. கவித.. கவித.. யா .. நாடு நடுல மானே தேனே பொன்மானே இல்லாம..





என் தங்கைகள் எப்பொழுதும் தங்கங்கள்
மதிப்பு ஏறி கொண்டே இருக்கும் வைரங்கள்

அண்ணனின் மனமோ பெரியது

"சீர்" என்பதோ சிறியது



"சீர்" கேட்டதே மகிழ்ச்சி

அது தந்திடுமா பொருப்புணாச்சி

அண்ணனின் கவிதையே இன்ப அதிர்ச்சி

வேண்டாம் எனக்கு வீண் புகழ்ச்சி




 

நீங்கள் வாடினால் நான் வாடுவேன்

நீங்கள் துடித்தால் நான் துடிப்பேன்

நீங்கள் சிரித்தால் நான் சிரிப்பேன்

இப்படி அடிக்கடி "ரீல்" விடுவேன்
இன்றுவரை எழுதியதில்லை கவிதை

இதுதான் கவிதை என்றால் இதோடு நிறுத்துவதில்லை

யாருக்கு வேண்டும் உன் கவிதை என்றால்

கொண்டுவருவேன் "சீர்" சினத்தியை...


நல்லாத்தான் இருந்துது.. அண்ணன் இப்புடி எல்லாம் எழுதுவான்னு நினைக்கல. First national bank of omaha ல வேலைன்னாலும் தமிழ் ததும்புது.. அதுக்கு என்னோட குசும்பு பதில்..



பார்ரா.. ..
நல்லாதாண்டா எழுதுறான் வெள்ளந்தியா பய புள்ள..
ஒரு ஐநூத்தி ஒரு ரூபா கேட்டதுக்கே இவ்வளவா ...? கேட்கும்போதே கண்ணெல்லாம் இருட்டுதே... ஐய்ஷோ... ஐய்ஷோ.. !!

கடைசி பாரா நல்லா இருக்குங்கிறத்துக்காக முழுசா படிக்க முடியுமா என்ன.. ?

கவிதைய கண்டுபுடிச்சவனும்.. இந்த சீரை கண்டுபுடிச்சவனும் ...ஒ... கிடைச்சான்...

கால்ல விழுவேன்னு சொல்ல வந்தேன்...!

அது என்னடா அண்ணன் சீறு.. அக்காங்கோ

மற்றும் ஷிஷ்டருங்கோ... சீர் கொடுத்தா atleast ரெண்டு பீர் கொடுத்தா இன்னா தப்புன்றேன்...?

சரி சரி..
யாருக்கு வேண்டும் உன் கவிதை ... கொண்டு வாடா ... "சீர்" சினத்தியை...!!
நல்லாதாண்டா வரையுறான்... நல்லா வருவடா... !!

பொங்கலோ பொங்கல் !!

Saturday, January 1, 2011

குறுஞ் செய்தி..

குறுஞ்செய்தி




அதே அலுவல்.. அதே அலுப்பு...!

அதே சன் டி. வி - அதில் அதே வி.டி.வி

அதே சாலமன் பாப்பையா..

உதய நிதி தயா நிதிகள் வழங்கும்...

மன்மத பானங்கள்... சோம சுறா பானங்கள் ...குவாட்டர் கட்டிங்குகள்...

அதே இட்லி.. அதே ஷேர் ஆட்டோ.. அதே அலுவல்.. அதே அலுப்பு...!

எங்க அப்பன் ஏன் அரசியலுக்கு போகலை..

அரசியல் வாரிசுகளை விட சினிமா வாரிசுகளை விட

என்னால் சாதிக்க முடியும்.. ஆனா முடியலை... !!

என் மகன் என்னை திட்டும் முன்னர் இதோ இப்போ போகிறேன்..

அரசியலுக்கா சினிமாவுக்கா ...? கண் முன்னர் நிழலாடும் நடுத்தர வர்கத்து பயத்துடன்..

அதே இட்லி.. அதே ஷேர் ஆட்டோ.. அதே அலுவல்.. அதே அலுப்பு ...

ஹாப்பி நியு இயர் .... சொல்லி அலுத்தாச்சு..

சிநேஹிதத்தை விட செல்லை பிடிச்சிருக்கு...

இதோ அழுத்த ஆரம்பிச்சாச்சு... குறுஞ் செய்தி..

ஹாப்பி நியூ இயர்...