Saturday, January 1, 2011

குறுஞ் செய்தி..

குறுஞ்செய்தி




அதே அலுவல்.. அதே அலுப்பு...!

அதே சன் டி. வி - அதில் அதே வி.டி.வி

அதே சாலமன் பாப்பையா..

உதய நிதி தயா நிதிகள் வழங்கும்...

மன்மத பானங்கள்... சோம சுறா பானங்கள் ...குவாட்டர் கட்டிங்குகள்...

அதே இட்லி.. அதே ஷேர் ஆட்டோ.. அதே அலுவல்.. அதே அலுப்பு...!

எங்க அப்பன் ஏன் அரசியலுக்கு போகலை..

அரசியல் வாரிசுகளை விட சினிமா வாரிசுகளை விட

என்னால் சாதிக்க முடியும்.. ஆனா முடியலை... !!

என் மகன் என்னை திட்டும் முன்னர் இதோ இப்போ போகிறேன்..

அரசியலுக்கா சினிமாவுக்கா ...? கண் முன்னர் நிழலாடும் நடுத்தர வர்கத்து பயத்துடன்..

அதே இட்லி.. அதே ஷேர் ஆட்டோ.. அதே அலுவல்.. அதே அலுப்பு ...

ஹாப்பி நியு இயர் .... சொல்லி அலுத்தாச்சு..

சிநேஹிதத்தை விட செல்லை பிடிச்சிருக்கு...

இதோ அழுத்த ஆரம்பிச்சாச்சு... குறுஞ் செய்தி..

ஹாப்பி நியூ இயர்...

No comments: